இனி ஒசி-ல நெட்ஃபிலிக்ஸ் பார்க்க முடியாது - நெட்ஃபிலிக்ஸ் கொடுத்த ஷாக்!
நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கில் நண்பர்களை இணைப்பதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என புது அறிவிப்பை பயன்பாட்டிற்கு கொண்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு ஓடிடி தளங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தாலும் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் ஓடிடியாக நெட்ப்ளிக்ஸ் இருந்து வருகிறது. பல்வேறு படங்கள், வெப்சிரிஸ், நிகழ்ச்சிகளை வழங்கும் நெட்ப்ளிக்ஸ் சில ஆண்டுகள் முன்னதாக வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது சப்ஸ்க்ரிப்ஷன் ப்ளான்களில் மாற்றம் செய்தது.
ஆம், மொபைலில் மட்டும் பார்க்கும் சப்ஸ்க்ரிப்சன் மாதத்திற்கு ரூ.199ல் இருந்து ரூ.149 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அது போல மொபைல், லேப்டாப், டிவி என அனைத்திலும் லாக் இன் செய்து பார்க்கும் வசதி கொண்ட சப்ஸ்க்ரிப்சன் மாதத்திற்கு ரூ.449ல் இருந்து ரூ.199 ஆக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அதிகபட்சம் 480 பிக்சல் குவாலிட்டி மட்டுமே கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கில் நண்பர்களை இணைப்பதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. ஒரே வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் நெட்ஃபிலிக்ஸ் சேவையை தனியாக கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம். ஆனால் வேறு இடங்களில் இருந்து ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பயன்படுத்தும் நபர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
ஒரே கணக்கில் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க இந்திய மதிப்பில் ரூ.200 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முறையில் வெளிநாடுகளில் இதனை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.