1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:48 IST)

அருண் விஜய்யோடு மோதுவாரா சிவகார்த்திகேயன்… டான் ரிலீஸ் தேதியில் குழப்பம்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக ‘டான்’ திரைப்படம் உள்ளது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துதுள்ளது. இந்த படம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நாளில் ஆர் ஆர் ஆர் படம் ரிலிஸ் ஆக உள்ளதால் அதற்கு வாய்ப்புகள் இல்லை என சொல்லப்படுகிறது.

இதனால் டான் திரைப்படம் மே மாதம் 12 ஆம் தேதிக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதையும் இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனுக்கும் அருண் விஜய்க்கும் இடையே கருத்து மோதல் எழுந்து ஒருவரை ஒருவர் தங்கள் படங்களில் சீண்டிப் பார்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் மே 6 ஆம் தேதி யானை திரைப்படம் கண்டிப்பாக ரிலிஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வார இடைவெளியில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம், ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.