வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2024 (12:26 IST)

200 மெகாபிக்சல் கேமரா.. ஆண்ட்ராய்டு 15.. இன்னும் பல..! அசத்தும் சிறப்பம்சங்களுடன் வெளியான Vivo X200 5G!

Vivo X200 Pro

பிரபலமான விவோ நிறுவனம் தனது புதிய மாடலான Vivo X200 5G மற்றும் Vivo X200 Pro 5G மாடலை வெளியிட்டுள்ளது.

 

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான விவோ நிறுவனம் ஆண்டுதோறும் புதிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களோடு பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

 

அந்த வகையில் தற்போது கேமராவிற்கான பல சிறப்பம்சங்களை கொண்ட புதிய Vivo X200 5G ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. Vivo X200 5G மற்றும் Vivo X200 Pro 5G இந்த இரு மாடல்களிலும் கேமரா மற்றும் ரேம் சிறப்பம்சங்களில் சிறிய அளவிலான மாறுபாடுகள் உள்ளது.

 

Vivo X200 5G சிறப்பம்சங்கள்:

 
  • 6.67 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிப்செட்
  • 3.63 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 12 ஜிபி / 16 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 15, 
  • 50 MP + 50 MP + 50 MP ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா
  • 32 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5800 mAh பேட்டரி, 90W ப்ளாஷ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
 

இந்த Vivo X200 5G ஸ்மார்ட்போன் ப்ளூ, ப்ளாக், வொயிட் மற்றும் டைட்டானியம் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை வங்கி சலுகைகள் உட்பட, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.59,399 ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.64,799 ஆகவும் உள்ளது.

 

Vivo X200 Pro 5G சிறப்பம்சங்கள்:

 
  • 6.78 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிப்செட்
  • 3.63 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 16 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம்
  • 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 15, 
  • 200 MP + 50 MP + 50 MP ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா
  • 32 MP முன்பக்க செல்பி கேமரா
  • 6000 mAh பேட்டரி, 90W ப்ளாஷ் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
 

இந்த Vivo X200 5G ஸ்மார்ட்போன் டைட்டானியம் க்ரே மற்றும் காஸ்மோஸ் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை வங்கி சலுகைகள் உட்பட, ரூ.85,499 ஆக உள்ளது.

 

Edit by Prasanth.K