வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:14 IST)

அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளியாகும் Vivo T3 Ultra! - விலை எவ்வளவு?

Vivo T3 Ultra

விவோ நிறுவனத்தின் புதிய Vivo T3 Ultra அட்டகாசமான வசதிகளுடன் வெளியாக உள்ளது.

 

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள ப்ராண்டுகளில் விவோவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது விவோ தனது புதிய Vivo T3 Ultra ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

 

Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
  • 6.77 இன்ச் அமொலெட் ஸ்க்ரீன்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 9200 ப்ளஸ் சிப்செட்
  • 3.35GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்டு ஸ்லாட்
  • 50 எம்பி + 8 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 16 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5ஜி, வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்சி டைப்-சி
  • 5500mAh பேட்டரி, 80W ப்ளாஷ் சார்ஜ்
 

இந்த Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் விலை ரூ.30,999லிருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்காலங்களில் புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்க பல நிறுவனங்களும் தயாராகி வரும் நிலையில் இந்த Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K