Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவாஸ்கருக்கு நெத்தியடி பதில் அளித்த அனுஷ்கா சர்மா! ரசிகர்கள் சப்போர்ட்!

Updated: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:21 IST)
விராட் கோலியைப் பற்றி பேசும் போது அனுஷ்கா சர்மாவையும் தேவையில்லாமல் இழுத்து பேசிய கவாஸ்கருக்கு அவர் காட்டமான பதிலளித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கே எல் பஞ்சாப் அணியும் ஆர்சிபி அணியும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. ஆர் சி பி அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார் கோலி. முந்தைய போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இதுகுறித்து வர்ணனை செய்த சுனில் கவாஸ்கர் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் தனிப்பட்ட வாழக்கையை கேலி செய்யும் விதமாக ஆபாசமாக பேசினார். அதில் ‘கோலி லாக்டவுன் சமயத்தில் அனுஷ்கா சர்மாவின் பந்துவீச்சில்தான் பயிற்சி செய்தார் போல’ எனக் கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த அவரை வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து நீக்கவேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது கவாஸ்கருக்கு பதிலளிக்கும் விதமாக அனுஷ்கா ‘மிஸ்டர் கவாஸ்கர் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. நிச்சயமாக நீங்கள் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்க முடியும். ஜெண்டில்மேன்களின் ஆட்டத்தில் உங்கள் பெயர் மிகப்பெரிய இடத்தில் உள்ளது.’ எனக் கூறியுள்ளார். கோலி 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சரியாக விளையாடாத போதும் இதுபோல அனுஷ்கா சர்மா  மேல் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments