வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (10:44 IST)

அவன் அடிக்க மாட்டான்… போடு பாத்துக்கலாம் – பவுலருக்கு தமிழில் அட்வைஸ் செய்த தினேஷ் கார்த்திக்!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் சக வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் தமிழில் ஆலோசனை சொன்னது மைக்கில் பதிவானது.

இந்திய வீரர்கள் பொதுவாக களத்தில் விளையாடும் போது இந்தி அல்லது ஆங்கிலத்தில் உரையாடிக் கொள்வார்கள். ஆனால் ஒரு சில சமயங்களில் தத்தமது தாய்மொழியிலும் பேசிக் கொள்வது உண்டு. அந்த வகையில் நேற்று ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் சக தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியிடம் தமிழில் பேசியது மைக்கில் கேட்டது.

ராஜஸ்தான் வீரர் ராகுல் தெவேதியா பேட் செய்யும் போது வருண் சக்ரவர்த்தியிட ம் ‘நேரா உள்ள போடு அடிக்கமாட்டான். அடிச்சா பாத்துக்கலாம் ‘ என ஆலோசனைக் கூற அதன் படி வருண் கூக்ளில் வீச அந்த பந்தில் ராகுல் போல்ட் ஆகி வெளியேறினார். இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.