செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (07:37 IST)

உலக அளவில் கொரோனா: பாதிப்பு 3.41 கோடி, பலி 10.18 லட்சம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 3.41 கோடியாக அதிகரித்துள்ளது.
 
உலகம் முழுவதும் 34,153,075பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,018,732 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 25,424,847 பேர்
மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,447,282 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 211,740என்பதும் குணமானோர் எண்ணிக்கை 4,699,706 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,310,267 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 98,708 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,270,007 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,813,586 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 143,962 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 4,180,376 என்பதும் குறிப்பிடத்தக்கது.