கிறிஸ்கெய்ல் அதிரடியால் இன்னொரு வெற்றி: 4வது இடத்தை பிடித்தது பஞ்சாப்!

செவ்வாய், 27 அக்டோபர் 2020 (07:17 IST)
கிறிஸ்கெய்ல் அதிரடியால் இன்னொரு வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46வது போட்டியான நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கில் 57 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதன் பின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது. கேப்டன் மோர்கன் 40 ரன்கள் எடுத்த போதிலும் ஸ்கோர் வெகுவாக உயரவில்லை
 
இந்த நிலையில் 150 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே மிக அபாரமாக விளையாடியது. குறிப்பாக கிறிஸ்கெய்ல் 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்தது அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் 150 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது என்பதும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments