Daily Horoscope
✕

ஒரே ஒரு சூப்பர் ஹுயூமனைத் தவிர அனைவரும் திணறினர் –விராட் கோலி கருத்து!

Updated: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:50 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடந்த நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 194 ரன்களை சேர்த்தது. இதில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிறிய மைதானமாக இருந்தாலும் அனைத்து பேட்ஸ்மேன்களுமே பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறினர். இதன் மூலம் அந்த அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி ‘ நாங்கள் 165 ரன்கள்தான் எதிர்பார்த்தோம். ஆனால் 194 ரன்கள் எப்படி வந்தது யாரால் வந்தது என்பது உங்களுக்கே தெரியும். இந்த விக்கெட்டில் ஒரே ஒரு சூப்பர் ஹ்யூமனைத் தவிர அனைவருமே திணறினோம். நான் எதிர்முனையில் நின்று டிவில்லியர்ஸின் ஆட்டத்தை ரசித்தேன்’ எனக் கோலி கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments