புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Updated : சனி, 17 அக்டோபர் 2020 (23:33 IST)

ஐபிஎல்-2020; தவான் அதிரடி சதம் ...டெல்லி அணி அபார வெற்றி....

இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியுடன் மோதின.
 
இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை நேரில் மோதியுள்ளன.இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
 
இதில், சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்குய் 179 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
சென்னை அணியில் டுப்ளஸிஸ் 58 ரன்களும், அம்பத்தி ராயுடு 44 ரன்களும், ஷேன் வாட்சன் 36 ரன்களும் ஜடேஜா 33 ரனகளும் எடுத்தனர்.
 
அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ஆரம்பவே அதிர்ச்சியாக இருந்தாலும், தவான் பொறுப்பாக விளையாடி 100 ரன்கள் எடுத்து அணியை மீட்டார். இந்நிலையில் டில்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.