செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (17:24 IST)

சாம் கரணும் ஜடேஜாவும் போதும்… மற்றவர்களை வீட்டுக்கு அனுப்புங்க – சமூகவலைதளங்களில் எழுந்த குரல்!

சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களுக்கு எல்லாம் பிரியாவிடை கொடுத்து புதிய அணியைக் கட்டமைக்க வேண்டுமென்ற குரல் எழுந்துள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி பெரும் தோல்வியை தழுவியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுவரையிலான 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி தரவரிசையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த தோல்விகளால் சிஎஸ்கே அணி கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் அணியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளதால் அணிக்கும் இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

அதனால் தோனி மற்றும் பிளமிங் ஆகியவர்கள் தாங்களாகவே பதவி விலகவேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில்  ’ஜடேஜா, சாம் கரணை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களுக்கு விடைகொடுத்து அனுப்புங்க்ள்.. புதிய நம்பிக்கைகளுடன் புதிய தொடக்கமாக இருக்கட்டும்’ என்பது போன்ற பதிவுகள் வெளியாகியுள்ளன.