திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (19:01 IST)

சிஎஸ்கே அணியின் சூப்பர் வெற்றி! இளைஞரிடம் வெளிப்பட்ட ஸ்பார்க்

சிஎஸ்கே அணியின் சூப்பர் வெற்றி! இளைஞரிடம் வெளிப்பட்ட ஸ்பார்க்
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் இளம்வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அபாரமாக ஆட்டத்தால் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. எனவே 146 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அவரது ஒவ்வொரு ஷாட்டிலும் ஸ்பார்க் தெரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியை அடுத்து சிஎஸ்கே அணி தற்போது 8வது இடத்தில் இருந்து 7 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது