1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. Today match between CSK Vs RCB

இன்னைக்காவது சிஎஸ்கே ஜெயிக்குமா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

IPL 2020
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் தகுதியை இழந்த நிலையில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தை அடைந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது.

அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.

தற்போது ப்ளே ஆஃபை இழந்துவிட்டாலும் தனது அணியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு பரிட்சார்ந்த முயற்சியை சிஎஸ்கே மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
டாஸ் வென்ற பெங்களூர்: முதலில் பேட்டிங் செய்ய முடிவு