Daily Horoscope
✕

வெரிகோஸ் வெயினை சரிசெய்ய முடியுமா...?

Written By Sinoj
Updated: சனி, 24 ஏப்ரல் 2021 (00:38 IST)
சுத்தமான மண், எறும்பு புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காயவைத்து, ஒரு மணி நேரம் கழித்து  வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.
 
மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு - 3 துண்டு, கற்றாழை நுங்கு - தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள் இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.
 
இதை நரம்பு சுருட்டல் இருக்கும் இடங்களில் தடவி காய வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை பொறுமையாக இதை செய்து வர வேண்டும். அப்படி செய்துவந்தால் முதலில் வீக்கமும், பிறகு வலியும், படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகும்.
 
அத்திக்காயிலிருந்தும் பால் கிடைக்கும். இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல் சரியாகும்.
 

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments