திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (00:20 IST)

விரைவில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பும் விஜய் படக்குழு

தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் ஷூட்டிங்கை விரையில் வெளிநாட்டில் முடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்65 படத்தை பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக அபர்ணா டாஸ் என்பவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் நாளை தேர்தல் நாள் என்பதால் விஜய் சென்னையில் ஓட்டுபோட்டவுடம் விஜய்65 படக்குழுவினருடன் ஜார்ஜியா நாட்டிற்குச் சென்றனர். அங்கு விஜய் மற்றும் அவரது படக்குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் விஜய்65 படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இப்படத்தின் மூன்றில் ஒரு பங்கு ஷூட்டிங் இங்குதான் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் இம்மாத இறுதியில் அங்கு ஷூட்டிங் முடிந்ததும், அடுத்து,சென்னை மற்றும் ஐதராபாத்தில் மீதிக் காட்சிகளைப் படமாக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.