விஷாலின் ''லத்தி ''பட ரிலீஸ் தேதியில் மாற்றம்!

செவ்வாய், 12 ஜூலை 2022 (18:42 IST)
ஏ. வினோத்குமார் இயக்கத்தில், நடிகர் விஷால் -சுனைனா நடித்துள்ள  படம் லத்தி. இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

.இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங் தற்போது சென்னை பல்லாவரத்தில்  நடந்து வருகிறது. இந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்கி வருகிறார். இதில் நடித்து வந்த நடிகர் விஷால், எதிர்பாராத விதமான காலில் காயம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தற்போது அவருக்கு பிசியோதெரபி  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,விஷால் காயம் அடைந்ததால் அவர் சம்மந்தப்பட்ட ஷுட்டிங் நிறுத்தப்பட்டது. அதனால்  இப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதிரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் வரும் செப்டமர் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்த்துடன் விஷாலின் லத்தி படம் வெளியாவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எல்லாம் காட்டு

ஜோடிப்பொருத்தம் சூப்பர்!.. மகளின் திருமண போட்டோக்களை வெளியிட்ட குஷ்பு!..

ஜெயிலர் 2 படத்தோடு மோதுகிறா ஓம்?!.. தனுஷ் எடுத்த அந்த முடிவு!...

வாரணாசி ஷூட்டிங் எப்ப முடியும்?.. இப்ப என்ன அப்டேட்?!.. ராஜமவுலி சொல்லிட்டாரே!...

Good Doctor வெப்சீரியஸின் காப்பிதான் தர்மனா?!.. அஷ்வத் மாரிமுத்து விளக்கம்!...

சஸ்பென்ஸ் ஓவர்!. குஷ்பு வீட்டு கல்யாணத்துக்கு தனியா போன திரிஷா..

அடுத்த கட்டுரையில்
Show comments