ஷூட்டிங்கின் போது நடிகர் விஷால் காயம்
விஷால் நடித்துவரும் லத்தி திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது அவர் காயமடைந்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ. வினோத்குமார் இயக்கத்தில், நடிகர் விஷால் -சுனைனா நடித்துள்ள படம் லத்தி. இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
. இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங் தற்போது சென்னை பல்லாவரத்தில் நடந்து வருகிறது. இந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்கி வருகிறார். இதில் நடித்து வந்த நடிகர் விஷால், எதிர்பாராத விதமான காலில் காயம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.