Daily Horoscope
✕

வில்லனான பேட்மேன்.. தடுத்து வீழ்த்துவாரா தோர்? – தோர் லவ் அண்ட் தண்டர் ட்ரெய்லர்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 24 மே 2022 (11:38 IST)
பிரபல மார்வெல் சூப்பர்ஹீரோவான தோரின் அடுத்த படமான லவ் அண்ட் தண்டர் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஹீரோ படங்களாக எடுத்து தள்ளி உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்துள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் அண்ட் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் போன்ற படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்துள்ளன.

அந்த வரிசையில் அடுத்ததாக வெளியாக உள்ளது பிரபல சூப்பர்ஹீரோ தோரின் லவ் அண்ட் தண்டர். இந்த படத்தில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராக நடித்துள்ளார். பேட்மேன் படத்தில் ஹீரோவாக நடித்த கிறிஸ்டியன் பெல் இதில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

எல்லாம் காட்டு

டோரதி படத்தின் அசல் கிளைமேக்ஸ் வேற! - கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

ஆல் டைம் ரெக்கார்ட் செய்த ஜெயிலர் 2 ... 16 நாட்களில் ரூ.780 கோடி வசூல்!

சொதப்பிட்டாங்க... ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47 படத்தை விமர்சித்த புளூசட்டை மாறன்!

தீபாவளிக்கு சிம்பு கொடுக்கும் டபுள் ட்ரீட் - வெளியாகும் அரசன் வீடியோ

என் கணவர் இப்படி இருக்கவேண்டும் - சாய் பல்லவி ஆசைய பாருங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments