செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (09:11 IST)

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி & அட்டகாசமான புகைப்படம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தயாரிப்பாக உருவாகி வருகிறது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் இப்போது ஜூன் 22 ஆம் தேதி அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் தொடர்பான ஸ்டைலான புகைப்படமும் வெளியாகியுள்ளது.