வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By VM
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (13:28 IST)

இசை கச்சேரியின் போது மேடையிலிருந்து தவறி விழுந்த பிரபல பாடகி

பிரபல ஹாலிவுட் பாடகி பவுல் அப்துல், பாடிக்கொண்டே நடனமாடி அசத்தும் இவர்,  தவெயிட்டிங் கேம்', 'ரோமி மைக்கல்: இன் தி பிகினிங்' போன்ற படங்களில்நடித்துள்ளார், இவர் அசத்தலாக நடனமாடியபடி இசை கச்சேரி நடத்தும் இவருக்கு அமெரிக்காவில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது,
 
இவர் 'ஸ்டிரைட் அப் பவுலா-2018 சுற்றுலா'- என்ற பெயரில் இசைக்கச்சேரி நடத்திவருகிறார், சமீபத்தில் பிலோக்சி நகரத்திற்கு சென்று கச்சேரி நடத்தினார்,அப்போது மேடையின் முனையில் நின்றுக்கொண்டு பாடிக்கொண்டிருந்த பவுலா, திடீரென ரசிகர்கள் கூட்டத்தில் தவறி விழுந்தார்.
 
இதையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் விழுந்த சில நொடிகளிலேயே எழுந்து நின்று மீண்டும் பாட ஆரம்பித்தார்,
 
இதேபோல் முன்னதாக நடைபெற்ற பல இசை கச்சேரியில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார் பவுலா.