ஆஸ்கர் விருதை வென்ற ஏட்ரியன் ப்ராடி படைத்த புதிய சாதனை!
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் நடந்த 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஏட்ரியன் ப்ராடி இரண்டாவது முறையாக வென்றார். ஏற்கனவே இவர் தி பியானிஸ்ட் படத்துக்காகவும் சிறந்த நடிகர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது வென்ற பின்னர் அவர் நன்றியுரையாட்டி பேசியதில் ஒரு புதிய சாதனைப் படைத்துள்ளார். அவர் தனது ஏற்புரையில் மொத்தம் 5 நிமிடம் 40 வினாடிகள் பேசினார். இது ஆஸ்கர் மேடையில் நடந்த அதிகநேர பேச்சு என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்னர் 1940 ஆம் ஆண்டு மிஸ் மினிவர் என்ற திரைப்படத்துக்காக சிறந்த நடிகை விருதை வென்ற கார்சன் 5 நிமிடங்கள் 30 வினாடிகள் பேசியதே அதிக நேர உரையாக தற்போது வரை இருந்தது.