வெள்ளி, 11 அக்டோபர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (18:15 IST)

ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி? மகாபாரத கதையின் ஒரு கிளை..!

Ayudha Puja
ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடி வரும் நிலையில், 'ஆயுத பூஜை' என்ற பெயர் எப்படி வந்தது என்பதை தற்போது பார்ப்போம். 
 
பஞ்சபாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில், வனவாசம் சென்று யாரும் கண்ணில் தட்டுப்படாமல் இருக்க அஞ்ஞான வாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்ததாகவும், அஞ்ஞானவாசம் முடிந்த பிறகு, அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்ததாகவும் அதன் காரணமாகதான் அந்த பூஜை செய்த தினத்தை 'ஆயுத பூஜை' தினம் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
மேலும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் விரதம் இருந்து பாண்டவர்கள் ஆயுதங்களை பூஜை செய்து வணங்கியதால், 'நவராத்திரி விரதம்' மற்றும் 'ஆயுத பூஜை' என்று பெயர் வந்ததாக மகாபாரத கதையின் மூலம் ஆன்மீக பெரியவர்கள் கூறி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran