செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (11:21 IST)

ஆயுதபூஜைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிடுகிடுவென உயர்ந்த விமான டிக்கெட்!

Flight

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

 

 

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக இருப்பதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே பேருந்துகள், ரயில்கள் நிரம்பி வழியும் நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமான சேவைகளின் டிக்கெட்டும் அதிகரித்துள்ளது. சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.3.300 என்ற அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.11,000 வரை உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரூ.5,000 வரை இருந்து வந்த கட்டணம் தற்போது ரூ.11,700 வரை அதிகரித்துள்ளது.

 

Edit by Prasanth.K