1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (10:20 IST)

அமாவாசை நாட்களில் சமையலில் பூண்டு மற்றும் வெங்காயத்தை தவிர்ப்பது ஏன்...?

Amavasai
அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள். அன்றைய தினம் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்காமல் அவர்களுக்குப் பிடித்த உணவை சமைத்துப் படையலிடலாம்.


ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை ராகு கேது என கூறப்படுகிறது. அதே சமயம் மருத்துவ ரீதியாக வெங்காயம் மற்றும் பூண்டு பல்வேறு நற்பலனைத் தருவதாக உள்ளது. அதே சமயம் மாதத்தில் இந்த 5 நாட்களிலாவது பூண்டு வெங்காயத்தை தவிர்க்க வேண்டியது அவசியம்.

அமாவாசையின் திகதி முன்னோர்களுடன் தொடர்புடையது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இந்த நாளில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்காமல் அவர்களுக்கு பிடித்த உனவை படையலிடலாம். அதே போல அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்ய வேண்டும்.

அமாவாசையில் மாலை நேரத்தில் தெற்கு திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இந்த நாளில் முன்னோர்கள் நம் குடும்பங்களை ஆசீர்வதிப்பதற்காகப் பூமிக்கு வருவதாக ஐதீகம். தென் திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம் அவர் பாத பிரகாசமாகிறது என்றும் நம்பப்படுகிறது.