புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (22:56 IST)

செல்வச் செழிப்பு அதிகரிக்க... இதைச் செய்யுங்கள்.!

வீட்டில் பண வரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும்  கடையில் உப்பு வாங்கி வரவேண்டும். இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்புதான் மகா லட்சுமியின்  அம்சமாகும்.
 
சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும் விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நல்ல நாள் ஆகும்.
 
கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை. வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம் கொசு  அண்டுவதில்லை.
 
எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
 
எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ, வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி  விடப்படுகிறதோ, பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ, அங்கெல்லாம் செல்வம் குவியும்.
 
எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ, எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும், இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம்  செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
 
நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது, அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு, அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட  தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.