வியாழன், 28 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (00:55 IST)

ஐந்தெழுத்து மந்திரத்தின் ரகசியம்

உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் உயர்ந்தது காயத்ரி மந்திரம். இரண்டாம் நிலை சிவாயநம எனும் மந்திரம். ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது.
 
சிவாயநம என்ற நாமமே உயிருக்குப் பயனாவது. எப்படியெனில், பிறப்பற்ற நிலைக்கு ஒரு உயிரை கொண்டு சொல்லக் கூடியது 'சிவாயநம' என்னும் மந்திரம் ஆகும். ஒவ்வொரு சமயமும் இறைவனுடன் உயிர் கலந்து நிற்கும் பேரானந்த நிலையைத்தான் முத்தி என்று கூறுகின்றன. ஓர் உயிரின் பயணமும் பிறப்பற்ற  நிலை நோக்கி செல்ல வேண்டுமானால் 'சிவாயநம' என்று ஓதுதல் வேண்டும்.
 
சி - சிவன், வா - அருள், ய - உயிர், ந - மறைப்பாற்றல், ம - ஆணவமலம். 
 
சி - சிவம் உடலில் ஆதார சக்கர அதிபதி, லக்ஷ்மி கடாட்சம், உடலில் உஷ்ண தன்மை, தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது. யோகத்தில் இஷ்ட சித்தியை தரும். மோட்சம் தரும் எழுத்து. பஞ்ச பூதங்களில் அக்னியை வசியம் செய்யும்.
 
வா - வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி, நோய்களை போக்கும், சஞ்சீவி .உடலில் பிராணன், தவத்தில் உயிர் சக்தியை தருவது, தேகத்தில் வசீகரம் அழகு தருவது, பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.
 
ய - ஆகாயம், சொல் வர்மம், நோக்கு வர்மம், தொடு வர்மம், இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது, உடலில் உயிர், சஞ்சிதா கர்மம், பிராப்த கர்மம், ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது, பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது.
 
ந - பூமி, உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது, துஷ்டா பிராப்தத்தை போக்குவது, மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம் தரவல்லது, தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவியை வசியம் செய்வது.
 
ம - நீர்-ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது, உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன்,  ஈஸ்வரன், மிருத்யு கால ருத்ரன், உமா தேவி ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது, பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது.