1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (23:59 IST)

கிருபானந்த வாரியாரின் ஆன்மிக பொன்மொழிகள்...

அன்பு என்னும் சாணத்தால் மனதை மெழுகுங்கள். அதில் நன்றி என்னும் சந்தனம் தெளித்து, கருணை விளக்கை ஏற்றி வையுங்கள். ‘மனித வடிவில் தெய்வம்’  என்று உலகம் உங்களை புகழும்.
 
கோபம் வரும்போதெல்லாம் கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். அவலட்சணத்துடன் இருப்பதை காண்பீர்கள். உடனே கோபம் பறந்தோடிவிடும்.
 
தர்மவழியில் தேடிய பணம் பல தலைமுறைக்கும் தொடர்ந்து நற்பயன் தரும். பொய், சூழ்ச்சி, வஞ்சனையால் தேடிய பணம் வந்த வேகத்தில் காணாமல்  போகும்.
 
வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. நல்லதை மட்டும் சிந்தியுங்கள். நல்லதை மட்டும் பேசுங்கள்.
 
வயதில் மூத்தவர்கள் மட்டும் பெரியவர்கள் அல்ல. பிறர் மீது குறைசொல்லாமல் பெருந்தன்மையுடன் இருப்பவர்களும் பெரியவர்கள் தான்.
 
தொழிலில் லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரி போல மனதில் கணக்கு பார்க்கும் வியபாரி போல, மனதில் எழும் நல்ல தீய எண்ணங்களை அலசி ஆராய்ந்து மனதைப் பயண்படுத்துங்கள்.
 
மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் ஒரே கருவி ஒழுக்கம் தான் அதை உயிராக மதித்துப் போற்றுங்கள்.
 
மனைவி தவிர்த்த மற்ற பெண்களை தாயாகக் கருதுங்கள். இதனால் சமுதாயத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி நிலைக்கும்.
 
உயிர்கள் வாழ தேவையான அனைத்தையும் கடவுள் வழங்கியிருக்கிறார். ஆசையை கட்டுப்படுத்தி உழைக்கும் மனப்பான்மை இருந்தால் போதும் அனைவரும் வளமுடன் வாழலாம்.
 
அன்பினால் பக்தி செலுத்த வேண்டுமே ஒழிய, அதைக் கொடு இதைக் கொடு என்று ஒருபோதும் கடவுளிடம் பேரம் பேசுவது கூடாது.