1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (15:22 IST)

கண்களின் கீழ் உண்டாகும் கருவளையத்தை போக்க உதவும் டிப்ஸ் !!

கசகசாவை பாலில் சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின் அதை மிக்சியில் சேர்த்து மைய அரைத்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகான தோற்றத்தை பெறுவதுடன் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடும்.

சிலரது முகம் எப்போதும் எண்ணெய் வடிந்தது போல் பொலிவு இல்லாமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.
 
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.
 
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி  சருமம் பொலிவோடு காணப்படும்.
 
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.