திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அருகம்புல் சாறை சாப்பிடவேண்டிய முறைகள் என்ன....?

அடிக்கடி சிறுநீர் கழிப்பது அடிப்பது அல்லது சிறுநீர் தடைபடுவது, சொட்டு சொட்டாக சிறுநீர் போவது இதற்கெல்லாம் அருகம்புல் சாறு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கபத்தை தடுக்க அருகம்புல் பொடி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். கபம் வாதம் பித்தம் இவை மூன்றையும் சமன் செய்வதற்கு உதவுகிறது. வாதத்திற்கு அருகம்புல் பொடி உடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட வேண்டும். 
 
பித்தத்திற்கு அருகம்புல் பொடி உடன் இஞ்சி சேர்த்து சாப்பிட வேண்டும். கபத்திற்கு அருகம்புல் பொடி உடன் திப்பிலி பொடியுடன் சாப்பிட வேண்டும்.
 
அருகம்புல் பொடி, கஸ்தூரி மஞ்சள் தூள், பச்சை பயிறு மூன்றும் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். கலந்து வைத்த பொடி கொண்டு குளித்து வருவதன் மூலமாக உடல் உஷ்ணம், சொறி, சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, அனைத்தும் சரியாகும்.
 
அருகம்புல் பவுடரை காலை மாலை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற நீர், தேவையற்ற கொழுப்பை குறைக்கும். கை கால் வீக்கத்திற்கும், அருகம் புல் சாப்பிட சரியாகும்.
 
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டைக்கு, ஐம்பது அருகம்புல் பொடி ஐம்பது கிராம் ககடுக்காய் பொடி சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். அதனை தினமும் காலை, மாலை, சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒருடம்ளர் தண்ணீரில், ஒரு தேக்க்கரண்டி பொடி போட்டுகுடித்து வரவும். அவ்வாறு குடித்து வருவதன் மூலமாக நாளடைவில் வெள்ளை வெட்டை குணமாகும்.
 
ஆரம்ப கால் புற்றுநோய்க்கு காலை, மாலை சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒரு தேக்கரண்டி அருகம்புல் பொடியை அரை தேக்கரண்டி வெண்ணையுடன் சாப்பிட, ஆரம்ப புற்றுநோய் சரியாகும்.