புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்ய குறிப்புகள்!!

குளிர்காலங்களில் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால் சிறந்த பலனை அடையலாம். இது தலைகுடிக்கு தேவையான ஈரப்பதத்தை  அளிக்கும்.
மூலிகைகளை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கும் எண்ணெய்யை பயன்படுத்தினால் தலை முடி தொடர்பான அனைத்து  பிரச்சினைகளையும் சரி செய்யலாம்.
 
தலைக்கு வாரம் ஒரு முறை கற்றாழை தேய்த்து குளிக்கலாம். கற்றாழை தேய்த்து குளிப்பதால் குளிர்ச்சி கிடைக்கும். மேலும் கூந்தல் மிருதுவாக இருப்பதை கண்கூடாக காணலாம்.
 
ஒவ்வொரு முறையும் தலைக்கு குளிக்கும்போது உங்கள் தலை முடியை கண்டிஷன் செய்ய மறந்து விடாதீர்கள். இயற்கை கண்டிஷனரான தேங்காய் பால், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை பயன்படுத்துங்கள். வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய்  தேய்த்துக் குளிப்பது அவசியம்.
 
வாசனைத் திரவியங்கள் கலக்காத பாதாம் எண்ணெய், அவகோடா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து முடியில்  தடவி மஜாஜ் செய்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.
 
குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படுவதால் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும். எனவே டீ - ட்ரீ ஆயில் 5 சொட்டுகள் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து ஷாம்பூ பயன்பாட்டுக்குப் பின் அதைக் கொண்டு தலையை அலச வறட்சியால் ஏற்படும் பொடுகுத் தொல்லை நீங்கும்.