1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

வெட்டி வேரை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்...!!

சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும்.  கண்களும் குளிர்ச்சியடையும். 
தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் பவுடரை பயன்படுத்தலாம். வெட்டி வேர் தூளை தலைக்கு தேய்த்து குளிப்பதால், முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.
 
வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி வர இயற்கையாக முகம் அழகு பெறும். வெட்டி வேரினால் செய்யப்படும்  இருக்கைகள் மூலநோய் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரத்தைக் குறைத்து உடலுக்கு நன்மை பயக்கும்.
வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.
 
வெட்டி வேரை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். இரண்டு நாள் கழித்து அந்த எண்ணெயினை  எடுத்து கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். 
 
பாசிப்பயறு 100 கிராம் ,வெட்டிவேர்  50 கிராம் எடுத்து அந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்தப் பவுடரை உடலுக்கு தேய்த்துக் தினமும் குளித்து வந்தாலே உடம்பில் வரும் சிறு உஷ்ணக் கட்டிகளும், உடல் விரிவதனால் ஏற்படும் வரிகளும்  மறைந்து போகும்.