திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (16:56 IST)

தலை முடி பிரச்சினைகளை தடுக்க உதவும் வெங்காய எண்ணெய் !!

Onions
தலை முடி பிரச்சினைகளை தடுக்க வேண்டுமென்றால் அதற்கு மிக சிறந்த எண்ணெய் அவசியம் தேவை. இதை தேர்வு செய்ய அதில் உள்ள ஊட்டச்சத்துக்களே போதும்.


வெங்காய எண்ணெய்யில் வைட்டமின் சி, எ, ஈ, பி போன்றவை நிறைந்துள்ளன. அத்துடன் இது சிறந்த நிருமி நாசினியாகவும் செயல்படும்.

தேங்காய் எண்ணெய் 250 மி.லி., வெங்காயம் 3, கறிவேப்பில்லை 1 கப், ஆமணக்கு எண்ணெய், ஆலிவ் எண்ணெய்.

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு வதக்கவும். பின் இவற்றுடன் கருவேப்பில்லை இலைகளையும் சேர்த்து வதக்கவும்.

10 நிமிடம் கழித்து இவற்றுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு இதனை ஆறவிட்டு வடிக்கட்டி கொண்டு தலைக்கு பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் நல்ல பலனை அடையாளம்.

வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தினால் தலை முடி உதிர்வை தடுத்து விடலாம். இதற்கு வாரத்திற்கு 2 முறை வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தாலே போதும். இது நேரடியாக முடியின் வேரை குணப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும்.