தலைமுடியை பராமரிப்பதற்கான சில இயற்கை அழகு குறிப்புகள் !!
ஒரு கப் தயிர், அரை கப் மயோனைஸ், ஒரு முட்டை மூன்றையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். தலையில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். முட்டையில் உள்ள விட்டமின்கள் கேசத்தை ஸ்மூத் ஆக்குவதுடன் வறட்சி மற்றும் பொடுகையும் கட்டுப்படுத்தும்.
3 ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் உடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக் நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை நேரடியாகச் சூடுபடுத்தாமல், கொதிக்கும் தண்ணீருக்குள் ஒரு பௌலில் வைத்து சூடுபடுத்தி, தலை முடியில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசுங்கள்.
ஒரு கப் தயிர், கால் கப் ஆரஞ்ச் ஜூஸ், நான்கு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ், கால் கப் தேங்காய்ப் பால், ஒரு முட்டை அனைத்தையும் அடித்துக் கலக்கிக்கொண்டு, தலையில் தடவிவிட்டு அரை மணி நேரத்தில் மைல்டு ஷாம்பூ கொண்டு அலசுங்கள்.
இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை நின்றுவிடும்.
விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு சுத்தமான துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்கும்.