1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (16:28 IST)

உங்களுக்கு காய்ச்சலா? அப்போ இந்த உணவையெல்லாம் தயவுசெய்து சாப்பிடாதீங்க..

காய்ச்சல் நேரத்தில் சரியாக சாப்பிட முடியாது. உடல் சோர்வாக இருக்கும். நாக்கில் கசப்புத்தன்மை இருக்கும். ஆனால்,  அதற்காக சாப்பிடாமல் இருந்தால் உடல் இன்னும் சோர்வடையும். அதனால் இட்லி, இடியாப்பம் போன்ற மென்மையான  திட உணவுகள் சாப்பிடலாம். திட உணவுகள் சாப்பிட முடியாத போது திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். 

நோய்த் தொற்றிலிருந்து விடுபட மருந்துகள் மட்டுமின்றி உணவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம். காய்ச்சலில் இருக்கும் போது, துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தி, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் ஆற்றலை குறைக்கிறது.
 
காய்ச்சலில் இருக்கும் போது கண்டிப்பாக டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதை குடிப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி உடலில் அதிக நீரிழப்பை ஏற்படுத்தும்.
 
வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது கட்டாயம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளின் பட்டியலில் காரமான உணவுகள் முதலில் உள்ளது. எனவே காரமான உணவு வகைகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. இறைச்சி செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.