புதினாவை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
சாதாரணமாகக் கிடைக்கும் கீரைகளுள் புதினாக்கீரை ஒன்று.
1. இதில் வைட்டமின் ஏ மற்றும் பி என்ற உயிர்ச்சத்துக்களும் இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன.
2. இந்தக் புதினாக் கீரையிலிருந்துதான் மென்தால் என்னும் ஒரு மருந்துப்பொருளை எடுக்கின்றனர்.
3. புதினாக்கீரையைப் பச்சையாகவே சாப்பிட வேண்டும். அப்போது தான் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். இந்தக் கீரை சவையாக இருப்பதுடன் நல்ல மனமுள்ளதாகவும் இருக்கும். இதன் மணம் பசியைத் தூண்டி, சாப்பிடுவதில் ஆர்வத்தை உண்டாக்கும்.
4. இது தரையில் படரும் செடி வகையைச் சேர்ந்தது. இந்தக் கீரையில் ஒரு வித காரத்தன்மை இருக்கும். இந்தச் செடியில் கீரையைத் தவிர பூ, காய் போன்ற எதுவும் இருக்காது.
5. இது உடலிலுள்ள் இரத்தத்தைத் தூய்மைப் படுத்தி, புதிய இரத்தம் உற்பத்தியாகச் செய்யும். அதனால் உடலுக்குச் சக்தியை அளிக்கும்.
6. வயிற்றுக்கும் குடலுக்கும் வலிமையைத் தரும். வாந்தியை நிறுத்தும். பேதியை குணமாக்கும். மாந்தத்தையும் நீக்கும்.
7. எலும்புகளுக்கும், பற்களுக்கும் வேண்டிய சக்தியை அளித்து, வலுவும் நல்ல வளர்ச்சியும் பெறச் செய்யும். பற்கள் சம்பந்தப்பட்ட பல நோய்களை நீக்கவல்லது.
8. வாய் துர்நாற்றத்தையும் போக்கவல்லது. அதனால் இந்தக் கீரையைக் கொண்டு பற்பொடியும் தயாரிப்பார். பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கையும் நீக்கவல்லது. குழந்தைகளுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் இருந்தால் இதைக் கொண்டு கசாயம் தயாரித்துக் கொடுத்து பலன் காணலாம்.
9. புதினாவை சட்னியாக அரைத்து சாப்பிடுபவர், இதைத் தவிர சைவ, அசைவ பிரியாணி போன்ற உணவுகளில் வாசனைக்காகவும். ருசிக்காகவும் இதைச் சேர்ப்பதுண்டு.
10. புதினாக் கீரை, ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
