1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (18:40 IST)

சர்க்கரை நோயுள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

Lemon
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உணவு கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதும் குறிப்பாக ஒரு சில பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. அந்த வகையில் எலுமிச்சை சாறு என்பது கோடை நேரத்தில் மிகவும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்றாலும் சர்க்கரை நோயாளிகள் இதனை குடிக்கலாமா என்றால் எலுமிச்சை சாறில் உப்பு சேர்த்து குடிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
எலுமிச்சை பழத்தில் சர்க்கரையை குறைக்கும் தன்மை உள்ளது என்பதால் எலுமிச்சை பல சாறு அல்லது உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் எலுமிச்சம் பழச்சாறில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலை அரித்து விடும் என்பதால் எலுமிச்சை சாற்றை பறித்து உடன் வாய் கொப்பளிக்க வேண்டும் என்றும் அதேபோல் சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு குடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran