1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (17:55 IST)

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடலாமா?

Fruits
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும் நிலையில் ஒரு சில பழங்கள் தவிர அனைத்து பழங்களையும் சாப்பிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல என்றும் அது ஒரு குறைபாடு என்றும் முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அந்த குறைபாட்டை வென்று விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 இந்த நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் புளிப்பு துவர்ப்பு சுவையுடைய பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும் அதிக இனிப்பு பழங்களை மட்டும் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
நெல்லிக்காய், மாங்காய், நாவல் பழம் உள்ளிட்ட உணவுகளில் புளிப்பு, துவர்ப்பு சுவை  உள்ளதால் இவைகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம் அதேபோல் பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளதால் இவற்றையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்
 
அதிக இனிப்பு பழங்கள் தவிர மற்ற அனைத்து பழங்களையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம் என்றும் பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரி அல்ல என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva