1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:15 IST)

ரத்த சோகை என்றால் என்ன? பெண்களை அதிகம் தாக்குவது ஏன்?

Anemia
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று இரத்தசோகை என்பதும் அந்த ரத்தசோகை நோய் பெண்களுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
ரத்தத்தில் சிவப்பழகு சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தோ அல்லது வடிவம் மாறினாலோ ஏற்படும் நோய் ரத்தசோகை என்பதாகும். சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை என்று கூறுகிறோம் 
 
உடலில் அதிகமான சோர்வு பலவீனம் தலைசுற்றல் மூச்சுத் திணறல் ஆகியவை இருந்தால் ரத்த சோகை நோயின் அறிகுறி என கொள்ளலாம் 
 
பெண்களுக்கு தான் ரத்தசோகை நோய் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் 10 பெண்களில் 6 பேருக்கு ரத்தசோகை நோய் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
இரும்புச்சத்து குறைபாடு தான் ரத்த சோகை நோய்க்கு முக்கிய காரணம் என்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருள்களை வழக்கமாக சாப்பிட்டால் ரத்தசோகை நோயை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
மாதவிடாய் காலத்தில் அதிக அளவு இரத்த போக்கு ஏற்படுவதால் பெண்களுக்கு அதிகமாக ரத்தசோகை ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva