1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (19:30 IST)

உலர்ந்த பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Dry Fruits
உலர்ந்த பழங்கள் மற்றும் பிரஷ் ஆன பழங்கள் என பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் நல்லது என முன்னோர்கள் கூறி இருக்கும் நிலையில் சர்க்கரை நோயாளிகள் உலர்ந்த பழங்களை சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருக்கும். 
 
இந்த நிலையில் பிரஷ் பழங்களை ஒப்பிடும்போது உலர்ந்த பழங்களில் அதிக சர்க்கரை இருக்கும் என்றும் உலர்ந்த பழங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுவதால் உடலில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் உலர்ந்த படங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
உலர்ந்த பழங்களை விட பிரஷ் பழங்கள் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் என்றும் அனைத்து ஊட்டச்சத்துகளும் செயற்கையாக இல்லாமல் இயற்கையாக அப்படியே இருப்பதால் அந்த பழங்களில் சத்து காணப்படும் என்றும் உலர்ந்த பழங்களை பொறுத்தவரை நீர் சத்து பிரித்து எடுக்கப்படுவதால் அதில் ஊட்டச்சத்துக்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
எனவே சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் சரி சாதாரணமானவர்களாக இருந்தாலும் சரி உலர்ந்த பழங்களை ஒப்பிடும்போது பிரஷ் பழங்களை சாப்பிடுவதே சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran