1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (19:18 IST)

நரம்பியல் பிரச்சனை இருந்தால் தலை சுற்றுமா?

health
நரம்பியல் பிரச்சனை இருப்பவர்களுக்கு தலைசுற்றல் அடிக்கடி வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைசுற்றல், கிறக்கம் ஆகிய நோய் கிட்டத்தட்ட அனைத்து வயதினரிடம் தற்போது காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்சனையை அதிகம் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் நரம்பியல் பிரச்சனை என்றும் வலிப்பு நோய் மற்றும் மது குடிப்பவர்களுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி வரலாம் என்று கூறப்படுகிறது. கடுமையான ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு லேசான தலைசுற்றல் வரும் என்றும் ஒரு சில மருந்துகள் சாப்பிடுவதாலும் தலை சுற்றலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
அடிக்கடி பயணம் செய்பவர்கள் தலையில் அடிபட்டவர்கள் ஆகியோர்களுக்கு தள்ளாட்டம் மற்றும் வாந்தி வரும் பிரச்சனை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பித்தம் அதிகமானாலும் தலை சுற்றல் வரும் என்றும் வாயில் கசப்பு புளித்த ஏப்பம் ஆகியவை காரணங்களாகவும் தூக்கம் சரியாக இல்லாமல் இருந்தாலும் தலை சுத்தல் வரலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
இதற்கு சில நாட்டு மருந்துகள் இருந்தாலும் மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Siva