நடிகர் சிரஞ்சீவிக்கு திடீர் அறுவை சிகிச்சை
தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் சிரஞ்சீவிக்கு திடீரென அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.
தமிழில் ரஜினிகாந்த் போல் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் சிரஞ்சீவி. இவர் சில வருடங்களாக சினமாவிலிருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, மத்திய மந்திரியாக இருந்தார்.
தற்போது அவர் கவனம் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. தமிழில் நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தி தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நீண்ட நாட்களாக அவருக்கு தோள்பட்டையில் வலி இருந்து வந்தது. அதனை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே அந்த அறுவை சிகிச்சையை அவர் செய்துகொள்வது சென்று முடிவெடுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு பின் அவர் இரண்டு வாரம் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால், அவர் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.
எனவே அவர் பூரண குணம் அடைந்த பிறகு கத்தி படம் தொடங்கப்படும் என தெரிகிறது.