1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (13:41 IST)

110 மில்லியன் ரெட்மி நோட் சோல்ட்: பெருமிதத்தில் சியோமி!!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் 110 மில்லியன் விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் உள்ளது. எத்தனை மாடல் ஸ்மாட்போன்கள் இந்திய சந்தையில் வெளியானாலும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போனுக்கான வாடிக்கையாளர்கள் தனியாகவே உள்ளனர். 
 
ரெட்மி நோட் ஸ்மாட்போன்ஸ் மலிவு விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளியாவதால் இதனை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். முதல் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் முதல் சமீபத்திய ரெட்மி நோட் 9 சீரிஸ் வரை ரெட்மி வாடிக்கையாளர்களுக்கு பிடித்த ப்ராண்டாகவே உள்ளது. 
 
இந்நிலையில், ரெட்மி பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு வரை உலகளவில் 110 மில்லியன் நோட் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து பெருமிதம் கொண்டுள்ளது.