தள்ளுபடி விலையுடன் அறிமுகமானது ரெட்மி வை2: விவரம் உள்ளே...
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனை தள்ளுபடியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரம் இதோ...
சியோமி ரெட்மி வை2 சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
# அட்ரினோ 506 GPU, 3 ஜிபி / 4 ஜிபி ராம்
# 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9, டூயல் சிம் ஸ்லாட்
# 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
# 5 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், 3080 எம்ஏஹெச் பேட்டரி
ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் மீது ரூ.1800 உடனடி தள்ளுபடி, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 240 ஜிபி கூடுதல் டேட்டா, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மீது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எலிகன்ட் கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் டார்க் கிரெ நிறங்களில் 3 ஜிபி ராம் மாடல் ரூ.9,999-க்கும், 4 ஜிபி ராம் மாடல் ரூ.12,999-க்கும் அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.