ரொம்ப கம்மியான விலையில் கடை தெருவுக்கு வந்த ரெட்மி 8A!!
சியோமி நிறுவனம் தனது புதிய படைப்பான ரெட்மி 8A ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.
ஆம், சியோமி நிறுவனம் இன்று தனது இரண்டு தயாரிப்புகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ஒன்று மலிவு விலையிலான ஸ்மார்ட்போன், மற்றொன்று ரெட்மி பவர் பேங்க். பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் அமேசான், Mi.com மற்றும் Mi ஸ்டோர்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்.
ரெட்மி 8A சிறப்பம்சங்கள்:
# 6.22 இன்ச் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ் 5
# 2 ஜிபி மற்றும் 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# 13+2 மெகாபிக்சல் ரியர் கேமிரா திறன் உடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா
# இன் பில்ட் கூகுள் லென்ஸ் போன் கேமிரா
# பேட்டரி திறன் 5,000mAh
விலை விவரம்:
1. ரெட்மி 8A 2 ஜிபி ரேம் ரூ.6,499
2. ரெட்மி 8A 3ஜிபி ரேம் ரூ.6,999