Expiring Messages: வாட்ஸ் ஆப் அப்டேட் இதுதான்...
வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.110 பதிப்பில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் வாஸ்ட் ஆப் வீடியோ ஸ்டேட்ட்ஸ் நேரத்தை 30 விநாடிகளில் இருந்து 15 விநாடிளாக குறைத்தது.
இதனைத்தொடர்ந்து த்ற்போது, வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.110 பதிப்பில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது, டெலீட் மெசேஜஸ் அம்சத்தினை பெயரை எக்ஸ்பையரிங் மெசேஜஸ் என மாற்றியுள்ளது.
குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட சிறிது நேரத்தில் அவற்றை மறைந்து போக செய்யும் அம்சத்திற்கு தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் குரூப் சாட் மற்றும் பர்சனல் சாட் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. இதனை குறிக்கும் இன்டிகேட்டர் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.