வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஜூலை 2020 (15:31 IST)

பழைய அப்டேட்டை புதுசாய் தந்த வாட்ஸ் ஆப் !!

டார்க் மோட் அப்டேட் இனி வாட்ஸ் ஆப் வெப் மற்றும் டெஸ்க்டாப் ஆப் ஆகிவற்றிலும் கிடைக்க உள்ளது. 
 
சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மொபைல் போன்களுக்கு வழங்கிய டார்க் மோட் அப்டேட்டை தற்போது வாட்ஸ் ஆப் வெப் மற்றும் டெஸ்க்டாப் ஆப் ஆகிவற்றிலும் வழங்கியுள்ளது. 
 
இந்த டார்க் மோட் அப்டேட் மட்டுமின்றி அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், கியூ ஆர் கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி உள்ளிட்ட அப்டேட்டுகளும் வழங்கப்பட உள்ளன.