முடங்கியது வாட்ஸ் ஆப்: ஹேக்கர்களின் நாச வேலையா?

வெள்ளி, 7 ஜூன் 2019 (08:46 IST)
உலகின் பல இடங்களில் வாட்ஸ் ஆப் முடங்கியுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ் ஆப்புக்கு முக்கிய இடம் உண்டு. மேசேஜ், போட்டோ, ஆடியோ, வீடியோ அனுப்புதல், வாய்ஸ் கால், வீடியோ கால் என பல விஷயங்கள் வாட்ஸ் மூலம் செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில், உலகின் பல இடங்களில் வாட்ஸ் ஆப் செயலில் திடீரென முடக்கத்திற்குள்ளானதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பயனர்கல் தங்கள் புகார்களை டிவிட்டர் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்து, உடனடியாக வாட்ஸ் ஆப்-ஐ அப்டேட் செய்யும் படி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 
 
எனவே, இது ஹேக்கர்களின் நாச வேலையாக இருக்குமோ என்ற அச்சத்தில் பயனர்கள் இருக்கும் நிலையில் இது குறித்து எந்த வித தகவலையும் வெளியிடாமல் வாட்ஸ் ஆப் நிறுவனம் மெளனம் காத்து வருகிறது. 

எல்லாம் காட்டு

எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனுக்கு பதவி!.. அதிமுகவில் எதிர்ப்பு அலை!...

கும்மிடிபூண்டியில் 3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை என்ற தகவல் பொய்யானது.. கனிமொழி குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம்..

எல்லாரையும் கட்சியை விட்டு நீக்குறது ஹிஸ்ட்ரியா?!.. பழனிச்சாமிக்கு சி.விஜயபாஸ்கர் எதிர்ப்பு!..

ஒரு எழுத்து மாறாம அப்படியே காப்பி பேஸ்ட்.. கனவு காணுவது கூட சொந்தமா கிடையாதா?

மற்ற கட்சியினர் தவெகவில் இணைவது பலமா?. தலைவலியா?.. தவெகவுக்கு உள்ள சவால்...

அடுத்த கட்டுரையில்
Show comments