திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (15:04 IST)

அப்டேட்டில் ஆப்பு வைத்த வாட்ஸ் ஆப்: டவுன்லோடுக்கு கட்டுப்பாடு!

வாட்ஸ் ஆப்பில் சில மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. இவை அடுத்த அப்டேட்டில் நடைமுறைக்கு வருமாம். 
 
வாட்ஸ் ஆப் 2.16.60.26 பதிப்பில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இவை அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டில் அனைவருக்கும் வழங்கப்படுமாம். இந்த அப்டேட் 2.16.60 என அழைக்கப்படுகிறது.
 
பயனர்களின் தனியுரிமையை கருதி வாட்ஸ் ஆப், மற்றவர்களின் ப்ரோஃபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாதபடி மாற்றத்தை கொண்டுவர உள்ளது. 
அதோடு, போட்டோ ஆல்பம் தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாம். இதுமட்டுமின்றி, வாய்ஸ் மெசேஜ்கள், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ்அப் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் மற்றவர்களின் ப்ரோஃபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது. தற்போது ஐ.ஓ.எஸ். பதிப்பிலும் இது கொண்டுவரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.