வோடபோன் இலவச வாய்ஸ் கால்: கண்டிஷன்ஸ் அப்லைய்ட்!
வோடபோன் நிறுவனத்தின் வோல்ட்இ சேவைகள் படிப்படியாக துவங்கிவருகிறது. தற்போது டெல்லி, குஜராஜ் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் வோல்ட்இ சேவை வழங்கப்படுகிறது.
அடுத்து கொல்கத்தா மற்றும் கர்நாடகாவிலும் வோல்ட்இ சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் வோல்ட்இ சேவைகளை அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களை கொண்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த சேவையை பெற முடியும்.
ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3T, ஒன்பிளஸ் 5, ஒன்பிளஸ் 5T. ஹூவாய் ஹானர் வியூ 10, ஹானர் 9i, ஹானர் 7X, ஹானர் 8 ப்ரோ, சியோமி ரெட்மி 4, Mi மிக்ஸ் 2, Mi மேக்ஸ் 2, நோக்கியா 5, நோக்கியா 8, சாம்சங் சி9 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வோடபோன் வோல்ட்இ வசதியை பயன்படுத்த முடியும்.
விரைவில் மற்ற ஸ்மார்ட்போன்களிலும் வோடபோன் வோல்ட்இ சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.