வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (11:37 IST)

மொக்க ஆஃபர்: ஜியோ முன்பு கத்துகுட்டியான வோடபோன்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்து சில வருடங்களே ஆன நிலையில், ஆஃபர்களையும் இலவசங்களையும் வழங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. 
 
இதனால், பல வருடங்களாக இந்த துரையில் இருந்த மற்ற நிறுவனங்கல் சரிவை சந்தித்து, வாடிக்கையாளர்கலின் எண்ணிக்கையும் இழந்தது. இருப்பினும், ஜியோவை போல பல சலுகைகளை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. 
 
அந்த வகையில், வோடபோன் நிறுவனம் ரூ.16-க்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 24 மணி நேரம்தான். 
ரூ.16 திட்டத்தில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற மற்ற சேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதன் வேலிடிட்டியை நீடிக்கவும் முடியாது. அதேபோல், இந்த ரீசார்ஜ் திட்டம் அசாம், கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், இதே போல் ஜியோ ரூ.19க்கு 24 மணி நேர வேலிடிட்டியுடன் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை வழங்கிவருகிரது. அதில்,  150 எம்பி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 20 எஸ்எம்எஸ், ஜியோவின் மற்ற சேவைகளும் வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் டேட்டாவின் அளவு வோடபோனை விட குறைவாக இருந்தாலும், மற்ற சேவைகளை வழங்குவதால் பயனர்கள் அதிகம் பயனடைய கூடும்.